search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் எம்எல்ஏ"

    • மிரா பயந்தர் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் சில ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதாக கூறப்படுகிறது.
    • மழை காலத்தின்போது வீடுகளில் இருந்து மக்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள் என மாநகராட்சி அதிகாரிகளிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் மிரா பயந்தர் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக கீதா ஜெயின் உள்ளார். முன்னாள் பாரதிய ஜனதா மேயரான இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சிவசேனா- பா.ஜனதா கூட்டணி ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில் மிரா பயந்தர் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் சில ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டுள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற கீதா ஜெயின் உரிய நோட்டீஸ் கொடுக்காமல் மழை காலத்தின்போது வீடுகளில் இருந்து மக்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள் என மாநகராட்சி அதிகாரிகளிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

    அப்போது அதிகாரி ஒருவர் சிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த கீதா ஜெயின் பொதுமக்கள் முன்னிலையிலேயே அந்த அதிகாரியை கன்னத்தில் அறைந்தார்.

    இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக பெண் எம்.எல்.ஏ சென்று வந்த பின்னர் கோவில் கங்கை நதி நீரால் சுத்தப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில்  உள்ள முஸ்காரா கர்ட் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு ராத் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ மனிஷா அனுராகி கடந்த ஜூலை 12-ம் தேதி ஒரு விழாவுக்கு சென்று இருந்தார்.

    பெண் எம்.எல்.ஏ போய் வந்த பிரபல ரிஷி த்ரோம் கோவிலில் பெண்கள் வழிபட தடை உள்ளது. இது தெரியாமல் கட்சி  தொண்டர்களின் வலியுறுத்தலின் பேரில் எம்.எல்.ஏ அங்கு சென்று உள்ளார். மகாபாரத காலத்தில் இருந்து இந்த கோயில் இருப்பதாக நம்பப்படுகிறது. 

    இந்த கோவிலில் பெண் பக்தர்கள் நுழைவதற்கு பல நூற்றாண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் கோயிலின் எல்லை சுவரைத் தொட்டாலும், அந்த பகுதி பஞ்சம் போன்ற இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

    கோவிலுக்குள் வந்தபோது, மனிஷா அனுராகி மட்டுமே பிரார்த்தனை செய்தார். அப்போது அவர் ஒரு புனிதமான தளம் மீது ஏறி நின்றதாக கூறப்படுகிறது. இது ஒரு புனிதமான இடம் மற்றும் மக்கள் மேடையில் குனிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தொண்டர்களின் நிர்பந்தததால் அங்கிருந்த பூசாரி சுவாமி தயானந்த் மகந்த் ஒன்றும் கூறவில்லை. மனிஷா அனுராகி வந்து சென்றதில் இருந்து சுத்தம் செய்வதற்காக அந்த கோவில் மூடப்பட்டது. கோயிலுக்குள் நுழைந்த மனிஷா அனுராகி குறைந்த சாதியினரே என்று பூசாரி கோபமடைந்தார். 

    மனிஷா அனுராகியின் வருகைக்கு பின் சுவாமி தயானந்த மகந்த், கிராம மக்களும் பஞ்சாயத்து ஒன்றை கூட்டினர். கோயிலுக்குள் நுழைந்ததிலிருந்து அவர்கள் கடவுளின்  கோபத்தை எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர்.

    அவரின் விஜயத்தின் பின்னர் ஒரு துளி நீர் மழை பெய்யவில்லை என்று அவர்கள் கூறினர். பின்னர் பஞ்சாயத்து தெய்வங்களின் கோபத்திலிருந்து கிராம மக்களை காப்பாற்ற ஆலயத்தை சுத்தப்படுத்த கோவில் வளாகத்தை கங்கை நீராலும் கோவில் சிலையை கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளின் சங்கமம் ஆகும் பிரயாக் கொண்டு சென்று சுத்தபடுத்துவது என முடிவுசெய்தனர்.

    அதன்படி கங்கை நீரால் கோவில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது. தெய்வங்களின் சிலைகள் பிரயாக்கில் சுத்தம் செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது. பக்தர்கள் 'தரிசனம்' செய்வதற்காக இந்த ஆலயம் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது தனக்கு தெரியாது என்று கூறியுள்ள மனிஷா அனுராகி, அங்குள்ள சிலர் மட்டுமே எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் அவர்கள் அரை வேக்காட்டுத்தனமானவர்கள் என பேட்டியளித்துள்ளார்.
    ×